வரும் 2028ல் ஜப்பானை முந்தும் இந்தியா: உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லராகும் என தகவல்
லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் வரும் 2028ல் உலகின் 3வது பெரிய


லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் வரும் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைபடுத்தியுள்ளது. தற்போது 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 ஆவது இடத்தில் உள்ள இந்தியா, வரும் 2018 ஆம் ஆண்டு 2,481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும. வரும் 2023ஆம் ஆண்டு 4,124 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 4 ஆவது இடத்தை பிடிக்கும் என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு 6,560 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...